< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ஈபிள் டவர் மாதிரியை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள்
|19 Oct 2022 12:47 AM IST
அரசு பள்ளி மாணவர்கள் ஈபிள் டவர் மாதிரியை வடிவமைத்தனர்.
கிருஷ்ணராயபுரம் அரசு நடுநிலை பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உலக புகழ்பெற்ற கட்டிடங்கள் மற்றும் பொருட்களை வடிவமைக்கும் வகையில் ஆசிரியர்கள் பல்வேறு பயிற்சி அளித்து வருகிறார்கள். அதன்படி 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஒன்றிணைந்து உலகபுகழ் பெற்ற ஈபிள் டவர் மாதிரியை வடிவமைத்தனர். இதனை கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் செந்தில்குமாரி, பள்ளி தலைமையாசிரியை மல்லிகா ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பாராட்டினர்.