< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் சாலை மறியல்
சேலம்
மாநில செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
7 Feb 2023 1:00 AM IST

மேட்டூர்:-

மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட குள்ளவீரன்பட்டி பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று மேட்டூர்-கொளத்தூர் நெடுஞ்சாலையில் குள்ளவீரன்பட்டி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மேட்டூர் நகராட்சி பொறியாளர் மணி மாறன், மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்