< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
16 July 2022 8:52 PM IST

திருவண்ணாமலை மாட வீதியில் பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை பே கோபுரத்தெருவில் சிமெண்டு சாலை அமைப்பதற்காக முதற்கட்டமாக தற்போது கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கால்வாய் அமைப்பதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளம் எடுக்கப்பட்ட பகுதியின் அருகில் உள்ள தெருவை சேர்ந்த மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒரு வீட்டின் சுற்றுச்சுவரில் ஒரு பக்கம் சரிந்து விழுந்தது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெருவிற்குள் சென்று வரும் வகையில் பாதை வசதி அமைத்து தரக்கோரி இன்று மாலை பே கோபுரம் அருகில் மாட வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டத.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்