< Back
மாநில செய்திகள்
மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
29 May 2023 1:56 PM IST

மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொலை, கொள்ளை

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் எல்லையில் உள்ள மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள், நகை பறிப்பு, வழிபறி, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மோட்டார் சைக்கிள் திருடுபோகும் சம்பவங்கள் தொடர்கிறது. மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்ய வேண்டும், மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல்களை கொடுக்க வேண்டிய நுண்ணுறிவு மற்றும் உளவுத்துறை போலீசார் தகவல்களை மறைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக அதிக எண்ணிக்கையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

அப்போதுதான் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். மேலும் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பராமரிக்க வேண்டும். எனவே தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொலை, வழிபறி போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்