< Back
தமிழக செய்திகள்

விழுப்புரம்
தமிழக செய்திகள்
வன்னிப்பேர் கிராமத்தில்மக்கள் தொடர்பு திட்ட முகாம்17-ந் தேதி நடக்கிறது

14 May 2023 12:15 AM IST
வன்னிப்பேர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 17-ந் தேதி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா வன்னிப்பேர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இம்முகாமில் மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள், இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.