< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
தேவையூர்-தம்பிரான்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்
|13 Oct 2023 1:01 AM IST
தேவையூர்-தம்பிரான்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தேவையூர் (தெற்கு) கிராமத்தில் வருகிற 18-ந்தேதியும், பெரம்பலூர் தாலுகா, தம்பிரான்பட்டி கிராமத்தில் 31-ந்தேதியும் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே, தேவையூர் (தெற்கு) மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தேவையூர் (தெற்கு) கிராம நிர்வாக அலுவலகத்திலும், தம்பிரான்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வேலூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், வருவாய்த்துறை அலுவலர்களிடமும் முன்னதாகவே மனுக்களை அளித்து பயனடையலாம், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.