< Back
மாநில செய்திகள்
தகாத வார்த்தையில் பேசிய அரசு பஸ் டிரைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
சிவகங்கை
மாநில செய்திகள்

தகாத வார்த்தையில் பேசிய அரசு பஸ் டிரைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
25 Oct 2023 12:30 AM IST

தகாத வார்த்தையில் பேசிய அரசு பஸ் டிரைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் ஈடுபட்டனர்.

மானாமதுரை

மானாமதுரையில் இருந்து செய்களத்தூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்சை டிரைவர் ஜெயராமன் என்பவர் ஓட்டிவந்தார். அப்போது செய்களத்தூர் விலக்கு பகுதியில் சாலை ஓரமாக நின்ற மோட்டார்சைக்கிளை எடுக்கசொல்லி ஜெயராமன் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு சாலையின் ஓரமாக நிற்கும் வாகனத்தை ஏன் எடுக்க வேண்டும்? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினராம். இதனால் பொதுமக்களுக்கும், டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் பஸ்சில் இருந்த பயணிகளும் தகாத வார்த்தைகளால் பேசியதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்