< Back
மாநில செய்திகள்

அரியலூர்
மாநில செய்திகள்
சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

6 Nov 2022 1:04 AM IST
சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நாகல்குழி கிராமத்தில் இருந்து மருதூர் செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலை கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சேதம் அடைந்துள்ளது. இதையடுத்து அந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள், சாலையில் மரக்கட்டைகளை போட்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததன்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.