< Back
மாநில செய்திகள்
தண்டையார்பேட்டையில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை
மாநில செய்திகள்

தண்டையார்பேட்டையில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 Jun 2022 10:38 AM IST

தண்டையார்பேட்டையில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் வந்ததால் அந்த கடை சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலை அருகே உள்ள சுந்தரம்பிள்ளை நகரில் மதுக்கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் சுவரொட்டி ஒட்டினர். ஆனாலும் அந்த பகுதியில் மதுக்கடையை திறப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்கள், "பள்ளி அருகே மதுக்கடை தேவையா?, பஸ் நிறுத்தம் அருகே மதுக்கடை அவசியமா?" என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்