< Back
மாநில செய்திகள்
சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
திருச்சி
மாநில செய்திகள்

சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்

தினத்தந்தி
|
14 Oct 2023 1:49 AM IST

சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்தது பாலாஜி நகர். இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பூனாம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாலாஜி நகருக்கு செல்ல வேண்டிய குடிநீர் செல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 30 பெண்கள் உள்பட 50 பேர் பாலாஜி நகர் மெயின்ரோட்டில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் தலைமையிலான போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஜோசப்கென்னடி உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணனிடம் கூறி உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்