< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வேளச்சேரியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - நடிகர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
|26 Jun 2022 8:22 AM IST
வேளச்சேரியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காமெடி நடிகர் ஜெயமணி. அந்த குடியிருப்பு வளாகத்தில் அதிக கதிர்வீச்சு கொண்ட செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு நடிகர் ஜெயமணியும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதையடுத்து நடிகர் ஜெயமணி தலைமையில் அந்த பகுதி மக்கள், செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் வேளச்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.