< Back
மாநில செய்திகள்
தேவகோட்டையில் மின்மயானத்தை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

தேவகோட்டையில் மின்மயானத்தை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
4 April 2023 12:15 AM IST

தேவகோட்டையில் மின்மயானத்தை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

தேவகோட்டை, ஏப்.4-

தேவகோட்டை ராம்நகர் 11-வது வார்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ம் ஆண்டு துணைமின்நிலையம் அருகே நவீன மின்மயானம் கட்டப்பட்டது. அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர எதிர்ப்பு கிளம்பியது.அதனால் மின் மயானம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டது.

தற்போது மீண்டும் மின்மயானத்தை திறப்பதற்கு நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வரும் நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை 11-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர்கள், உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, நாச்சியார்புரம் மற்றும் சுற்றுவட்டாரபகுதி மக்கள் மின் மயானம் முன்பாக கூடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தேவகோட்டை துணை சூப்பிரண்டு பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்