< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்
|25 March 2023 12:35 AM IST
சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட ஐ.ஏ.எஸ். நகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து உள்ள தனி நபருக்கு ஆதரவாக மாநகராட்சி ஊழியர்கள் செயல்படுவதாக கூறி ஐ.ஏ.எஸ். நகர் நல சங்கத்தினர் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நகர் நலச் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.