< Back
மாநில செய்திகள்
கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
தென்காசி
மாநில செய்திகள்

கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

தினத்தந்தி
|
10 Oct 2023 12:56 AM IST

கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

பூர்வீக தமிழர் விடுதலை கட்சி பொதுச் செயலாளர் இசைவாணன் பொதுமக்களுடன் வந்து தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் துரை ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் புதிரை வண்ணார் சமூக மக்கள் வணங்கிவரும் மாடத்தி அம்மன் கோவிலை வருவாய்த்துறை அதிகாரிகள் கூறிய பிறகும் சிலர் அதனை இடித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்