< Back
மாநில செய்திகள்
கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கலெக்டரிடம், பொதுமக்கள் மனு

தினத்தந்தி
|
8 Jun 2022 3:44 AM IST

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் சாலை, குடிநீர் வசதிகளை செய்து தரவேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு

நெல்லை:

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதி பொதுமக்கள் நேற்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி கண்மாயை சரி செய்து தர வேண்டும். மாநகராட்சி குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்கு சரியாக எரியவில்லை. அதை சரி செய்து தர வேண்டும். பழுதடைந்த சாக்கடைகளை சரி செய்ய வேண்டும். சாலை இல்லாத தெருக்களில் சாலை அமைத்து தர வேண்டும். நூலகம் அமைத்து தர வேண்டும். பஸ்நிறுத்தம் கட்டித்தர வேண்டும். தெருக்களுக்கு பெயர் பலகை வைக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்