< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
|13 May 2023 12:20 AM IST
குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்கப்பட்டது.
க.பரமத்தி ஒன்றியம், ஜெயந்தி நகர் காலனியில் 200-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அருகே உள்ள தண்ணீர் பந்தலில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இந்தநிலையில் அந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேலும் சில பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மேற்கண்ட பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து நேற்று ஜெயந்திநகர் பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து, ஒன்றிய ஆணையரிடம் புகார் மனு கொடுத்து, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.