< Back
மாநில செய்திகள்
வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
கடலூர்
மாநில செய்திகள்

வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் மனு

தினத்தந்தி
|
17 Oct 2023 12:15 AM IST

வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனா்.

பண்ருட்டி அருகே சன்னியாசிப்பேட்டை காமராஜர்நகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக காமராஜர்நகரில் வசித்து வருகிறோம். அனைவருமே கூலி வேலை செய்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு, மனை ஏதும் கிடையாது. வாடகைக்கு தான் குடியிருந்து வருகிறோம். ஆகவே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்