கன்னியாகுமரி
செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
|நித்திரவிளை அருேக செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே உள்ள வாவறை ஊராட்சிக்கு உட்பட்ட சரல்முக்கு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி மேற்கொண்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு ெதரிவித்து வந்தனர். மேலும் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட எந்த பகுதியிலும் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், கடந்த சில தினங்களாக அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து நேற்று மாலையில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைைமயில் பொதுமக்கள் திரண்டு பணி நடைபெறும் இடத்துக்கு சென்றனர். அங்கு சம்பந்தப்பட்டவர்களிடம் பணிைய ரத்து செய்யுமாறு கோரினர். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் உரிய முறையில் மனு கொடுத்து பணியை தடுத்து நிறுத்துவதாக கூறிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முன்சிறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன், வாவறை பேரூராட்சி தலைவி மெற்றில்டா, துணை தலைவர் ராஜேஷ் போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.