< Back
மாநில செய்திகள்
அம்பை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
மாநில செய்திகள்

அம்பை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
28 July 2022 1:59 PM IST

அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

அம்பை,

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை இந்துக்களுக்கு மிக முக்கியமான விசேஷ நாளாகும். இந்நாளில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் .ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற தாமிரபரணி நதிக்கரையில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும்.

அதன் அடிப்படையில் தாமிரபரணி நதி பாயும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் மாநிலம் முழுவதும் உள்ள பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து சுவாமியை வணங்கி செல்வர்.

பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, தொடர்ந்து தாமிரபரணி நதி பாயும் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூடதடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு பொதுமக்கள் அதிக அளவில் தர்ப்பணம் கொடுத்தனர்.

அம்பாசமுத்திரம் தாமிரபரணி காசிநாதர் தீர்த்தக்கரை மற்றும் சின்ன சங்கரன்கோவில், கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

மேலும் செய்திகள்