< Back
மாநில செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம்

தினத்தந்தி
|
25 Jun 2023 5:39 PM IST

திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் கே.ஆர்.சுந்தரத்தின் நூற்றாண்டு விழா, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கட்சி வளர்ச்சி நிதியமைப்பு பொதுக்கூட்டம் திருப்பத்தூர் ஜில்லா ரோடு ஆலமரம் அருகே நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தாலுகா செயலாளர் எம்.காசி தலைமை தாங்கினார். ரங்கன், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் தயாநிதி, சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர் ஜாபர்சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் கேசவன், ரவி, உள்பட கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
மேலும் செய்திகள்