< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
இந்திய மாணவர் சங்க பொதுக்கூட்டம்
|27 Aug 2022 6:11 PM IST
இந்திய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நடந்தது.
திருவாரூரில் இந்திய மாணவர் சங்கத்தின் 26-வது மாநில மாநாட்டையொட்டி ஊர்வலம் நடந்தது. இதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தெற்கு வீதியில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். இதில் அகில இந்திய தலைவர் சானு, துணை செயலாளர் நிதிஷ் நாராயணன், மாநில செயலாளர் மாரியப்பன், மாநில துணை செயலாளர் பிரகாஷ், மத்தியக்குழு உறுப்பினர்கள் சத்யா, ஜான்சி, நிருபன் சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.