நாகப்பட்டினம்
பொதுமக்கள் வலியுறுத்தல்
|திருமருகலில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
திருமருகலில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்
திருமருகல் ஊராட்சி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வேளாண்மைதுறை அலுவலகம், பொதுப்பணி துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கும், கடைத்தெருவிற்கும் ஒன்றிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். திருமருகல் பகுதியில் 100-க்கும் அதிகமான நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சுற்றித்திரியும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே விழுந்து விபத்துகளை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் நடந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடித்து அச்சுறுத்தி வருகிறது.
பிடிக்க வேண்டும்
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமருகலில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.