< Back
மாநில செய்திகள்
வருவாய் கிராமங்கள் மறுசீரமைப்பு குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

வருவாய் கிராமங்கள் மறுசீரமைப்பு குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

தினத்தந்தி
|
27 Sep 2022 6:45 PM GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் மறுசீரமைப்பு குறித்து ெபாதுமக்கள் கருத்து ேகட்பு கூட்டம் நடந்தது.

கருத்து ேகட்பு கூட்டம்

திருப்பத்துார் மாவட்டத்தில் பதிவு மாவட்டத்தில் உள்ள 6 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆட்சி எல்லையை வருவாய் மாவட்டம் மற்றும் வருவாய் வட்டத்துக்கு ஏற்ப மறு சீரமைப்புப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.

இதைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் திருப்பத்தூா் கலெக்டா் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினாா்.வேலூா் மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி. சுதாமல்லியா முன்னிலை வகித்தார். திருப்பத்துார் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பிரகாஷ் வரவேற்றார்.

இதில் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

195 வருவாய் கிராமங்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 199 ஆக இருந்த வருவாய் கிராமங்கள் தற்போது 195 வருவாய் கிராமங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கலாம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் மறு சீரமைப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள், கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தெரிவித்தார்.

இதில் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) செல்வநாராயணசாமி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஆனந்தகிருஷ்ணன், பதிவுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்