< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
14 Feb 2023 1:23 PM IST

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 243 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.38 ஆயிரத்து 968 மதிப்பில் விலையில்லா சலவைப்பெட்டிகள், காட்டாங்கொளத்தூர் குறு வட்டம் நின்னகரை ஊராட்சியில் இருளர் பழங்குடியினர் 11 நபர்களுக்கு புதிய மின்னணு ரேஷன்கார்டுகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இப்ராஹிம், உதவி கலெக்டர் (பயிற்சி) அபிலாஷ் கவுர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வெற்றி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்