< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
|15 Jun 2023 12:12 AM IST
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மனுக்களை போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர், சம்மந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.
கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கூறுகையில், 'மாவட்டத்தில் அனைத்து சட்டவிரோத செயல்கள் குறித்து நேரடியாக 91599 59919 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்' என்றார்.