< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ரத்து
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ரத்து

தினத்தந்தி
|
24 July 2022 10:47 PM IST

144 தடை உத்தரவால் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ரத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெறவுள்ள மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது. எனவே பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடவேண்டும். மேலும் இணையதளத்தின் மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம். அந்த மனுக்களின் மீது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்