< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
27 Dec 2022 3:14 PM IST

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் நிலப்பிரச்சினை, சமூக பாதுகாப்பு திட்டம், வேலைவாய்ப்பு, கடன் உதவி, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 212 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் மதுசூதனன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்