காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்
|காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 345 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் சின்னிவாக்கம் கிராமம் ரோட்டுத்தெரு என்ற முகவரியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி அஜித்துக்கு 3 சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனம் வழங்க மனு அளித்துள்ளதை தொடர்ந்து மனுதாரருக்கு ரூ.83 ஆயிரத்து 500 மதிப்புள்ள மூன்று சக்கர வாகனம் மாவட்ட கலெக்டர் விருப்புரிமை கொடை நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளி நபருக்கு மூன்று சக்கர சைக்கிள் ரூ.10,000 மதிப்பில் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித் ஜெயின், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.