< Back
மாநில செய்திகள்

திருநெல்வேலி
மாநில செய்திகள்
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

19 Oct 2023 12:47 AM IST
நெல்லையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் அனைத்து புதன் கிழமைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற முகாமில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் ஆதர்ஷ்பசேரா, சரவணகுமார் ஆகியோரிடம் 13 பேர் புகார் மனுக்களை அளித்தார்கள். மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பலர் கலந்துகொண்டு போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் கோரிக்கை மனுகளை கொடுத்தனர்.