< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் பொது விருந்து
|16 Aug 2023 12:38 AM IST
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் பொது விருந்து நடைபெற்றது.
77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. இதனையொட்டி கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் அன்னதான மண்டபத்தில் பொதுவிருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்.பி.ஜோதிமணி, உதவி ஆணையர் நந்தகுமார், துணை மேயர் தாரணி சரவணன், ஆசி தியாகராஜன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.