< Back
மாநில செய்திகள்
திமுக ஆட்சியில் அராஜகம் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம் - சசிகலா குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

திமுக ஆட்சியில் அராஜகம் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம் - சசிகலா குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
24 Sept 2022 5:18 PM IST

திமுக ஆட்சியாளர்களின் அராஜகங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சியாளர்களின் அராஜகங்கள், அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது. மேலும், பொதுமக்கள் நிம்மதி இழந்து வேதனையால் தவிக்கிறார்கள்.

ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாததால், தி.மு.க.வினரை எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக மக்கள் அமர வைத்துள்ளார்கள். ஆனால், தி.மு.க.வினரோ, தமிழகத்தை ஏதோ இவர்களுக்கே பட்டயம் எழுதி கொடுத்ததுபோல் நினைத்துக்கொண்டு செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

இதுபோன்ற தி.மு.க.வினர் செய்கின்ற மக்கள் விரோத செயல்களை, ஆட்சியாளர்கள் தடுக்கவில்லை என்றால், அது தமிழகத்தையும், தமிழக மக்களையும் கடுமையாக பாதிக்கும் என்பதை இந்த ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க.வினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவற்றை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்யமாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்