< Back
தமிழக செய்திகள்

புதுக்கோட்டை
தமிழக செய்திகள்
பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

12 March 2023 12:42 AM IST
இலுப்பூரில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் துரைராஜ் தலைமை தாங்கினார். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்ய வேண்டி மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. சில மனுக்கள் மேல் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் வருவாய்த்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.