பெரம்பலூர்
பெரம்பலூரில் நாளை மறுநாள் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்கள்
|பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்கள் பெரம்பலூரில் நாளை மறுநாள் நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்கள் கிராமங்கள் விவரம் வருமாறு:-
பெரம்பலூர் தாலுகா ஆலம்பாடி கிராமத்தில் ஆர்.டி.ஓ. தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகா நூத்தப்பூர் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், குன்னம் தாலுகா கீழப்பெரம்பலூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா புஜங்கராயநல்லூர் கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் முகாம்கள் நடக்கிறது. மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.