< Back
மாநில செய்திகள்
கடலூர் மாவட்டத்தில்  தாலுகா அலுவலகங்களில் பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம்    நாளை மறுநாள் நடக்கிறது
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

தினத்தந்தி
|
9 Nov 2022 6:45 PM GMT

கடலூர் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.


கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களுக்குட்பட்ட கிராமங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. அதாவது கடலூர் தனி தாசில்தார் (குடிமை பொருள்) அலுவலகம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்ட வழங்கல் அலுவலகங்கள், சிதம்பரம் குடிமை பொருள் தனி தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் நடக்கிறது.

ஆகவே மேற்கண்ட தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை, செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்வதற்கான கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும். மேலும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களும், 60 சதவீத ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனு அளிக்கலாம்.

இந்த கூட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன்கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்