பெரம்பலூர்
பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
|பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நடந்தது.
தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு அரணாரை (வடக்கு) ஆலம்பாடி கிராமத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி தலைமையில் நடந்தது. கூட்டத்தினை வட்ட வழங்கல் அலுவலர் ஆறுமுகம் முன்னின்று நடத்தினார். இதில் கூட்டுறவு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் வட்டாரத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 9 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. அடுத்த பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் கிராமம் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.