< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம்

தினத்தந்தி
|
11 Aug 2023 3:48 PM IST

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு காஞ்சீபுரம் வட்டத்தில் படுநெல்லி, உத்திரமேரூர் வட்டத்தில் இளநகர், வாலாஜாபாத் வட்டத்தில் திருவெண்கரணை, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வல்லம், குன்றத்தூர் வட்டத்தில் நல்லூர் போன்ற கிராமங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், நகல் ரேஷன்கார்டு, கைப்பேசி பதிவு/மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும் 3-ம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய ரேஷன்கார்டு பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்