< Back
மாநில செய்திகள்
கொத்திமங்கலம் கிராமத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கொத்திமங்கலம் கிராமத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
22 March 2023 2:54 PM IST

கொத்திமங்கலம் கிராமத்தில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த கொத்திமங்கலம் கெங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாகவும் ஐல்லிகள் பரப்பப்பட்ட நிலையில் உள்ளது.

இதனால் பள்ளிக்கு நடந்து செல்லும் குழந்தைகள் ஒருசில சமயங்களில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்து சிறுசிறு காயங்கள் ஏற்படுகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி அருகே உள்ள சாலையை சீராமைக்க கோரி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்