< Back
மாநில செய்திகள்
கல்பட்டு கிராமத்தில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

கல்பட்டு கிராமத்தில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
26 Jun 2022 10:38 PM IST

கல்பட்டு கிராமத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோளிங்கரை அடுத்த கல்பட்டு கிராமத்தில் 3 ஆண்டுக்கு முன்பு விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கும், மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்வதற்கும் ஏரிக்கரையில் ரூ.13 லட்சத்தில் 600 மீட்டர் தூரத்துக்கு ஜல்லிக்கற்கள் சாலை அமைத்து அப்படிேய கிடப்பில் போட்டு விட்டார்கள். அந்தச் சாலையை, தார் சாலையாக அமைப்பதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது புதர் மண்டி ஒத்தையடி பாதையாக காட்சி அளிக்கிறது. விவசாயிகள், கால்நடைகளுக்கு பயன்படும் விதமாக இந்தச் சாலையைச் சீரமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்