காஞ்சிபுரம்
வரதராஜபுரம் ஊராட்சி அம்மா பூங்காவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
|வரதராஜபுரம் ஊராட்சி அம்மா பூங்காவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள குமரன் நகர் பகுதியில் 2017-2018 -ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் குழந்தைகள், மற்றும் சிறுவர்கள், விளையாடி வந்தனர். இதேபோல் உடற்பயிற்சி கூடத்தில் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்தும் தற்போது பெய்து வரும் மழையில் வெள்ளம் போல் மழைநீர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் பல லட்சம் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் துருப்பிடித்து விணாகும் நிலையில் உள்ளது. எனவே பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற குன்றத்தூர் ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.