< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
|15 Jun 2023 12:15 AM IST
சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
சிதம்பரம்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா நாளை மறுநாள்(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 25-ந் தேதி தேர்த் திருவிழா, 26-ந் தேதி மகா அபிஷேகம், ஆனி திருமஞ்சன தரிசனம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கோவிலில் இருந்து தினமும் சாமி புறப்பாடு நடைபெறும் கீழ சன்னதியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், சாமியை கோவிலில் இருந்து வெளியே கொண்டு வர சிரமம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே நடராஜர் கோவிலை சுற்றியுள்ள 4 வீதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம், காவல் துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.