அரியலூர்
குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை
|குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் பஞ்சாயத்துக்குட்பட்ட புது காலனி தெருவில் நூலகம் அருகே உள்ள தெருக்களில் கடந்த சில மாதங்களாக 50க்கும் மேற்பட்ட குரங்குகள் காலை முதல் மாலை வரை அப்பகுதிகளில் சுற்றிக்கொண்டு அங்குள்ள வீடுகளில் முன்பக்கம் அல்லது பின்பக்கம் கதவுகள் திறந்து இருந்தால் வீட்டுக்குள்ளே புகுந்து டப்பாக்களில் உள்ள உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதோடு அவற்றைக் கொட்டி நாசம் செய்து விடுகின்றன சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை பாத்திரங்களோடு தூக்கி சென்று விடுகின்றன. மேலும் நெல் கடலை சோளம் போன்ற பொருள்கள் மூட்டைகளில் இருந்தால் அவற்றை அவிழ்த்து நாசம் செய்து விடுகின்றன. மேலும் வீட்டு தோட்டங்களில் உள்ள தென்னை வாழை, கொய்யா போன்ற காய் பழங்களை பறித்து கீழே வீசி சென்று விடுகின்றனர். வீடுகளில் ஆட்கள் இல்லை என்றால் ஜன்னல் வழியாகவோ அல்லது சுவர்களின் சந்து வழியாகவோ வீட்டிற்குள் இறங்கி விடுகின்றன ஓடுள்ள வீடுகளில் ஓடுகளை பிரித்து விட்டு வீட்டுக்குள்ளே இறங்கி வீட்டில் உள்ள பொருட்களை கொட்டி நாசம் செய்கின்றன இதனால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் மிகவும் சிரமத்துக்குள் ஆகின்றனர் எனவே இப்பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.