< Back
மாநில செய்திகள்
பூனிமாங்காடு ஊராட்சியில் கால்நடை ஆஸ்பத்திரியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பூனிமாங்காடு ஊராட்சியில் கால்நடை ஆஸ்பத்திரியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
11 Feb 2023 9:08 PM IST

பூனிமாங்காடு ஊராட்சியில் கால்நடை ஆஸ்பத்திரியை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு ஊராட்சியில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக தனியார் கட்டிடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் பழுதடைந்தும், கழிவறை வசதியில்லாததால் பெண் டாக்டர் மற்றும் ஊழியர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கால்நடை ஆஸ்பத்திரிக்கு நிரந்திர கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

இதையடுத்து பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் 2 மாதங்களாகியும் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் மூடி கிடக்கிறது. இதனால், கால்நடைகள் மீண்டும் சேதமடைந்த பழைய கட்டிடத்தில் சிகிச்சை பெறும் அவலம் உள்ளது.

எனவே புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்