< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கொசு மருந்து அடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்
|26 Nov 2022 12:58 AM IST
கொசு மருந்து அடிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் நிலை உள்ளது. இதனை தடுக்க நீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தியாகாத வகையிலும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அரியலூர் நகரில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. அந்த வாகனம் விரைவாக செல்வதால் முறையாக கொசு மருந்து அடிக்கப்படவில்லை என்றும், தெருக்களில் சந்துகளில் உள்ள வீடுகளில் கொசு மருந்து அடிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் முறையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.