திருவாரூர்
விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும்- பொதுமக்கள்
|லெட்சுமாங்குடியில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லெட்சுமாங்குடியில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லெட்சுமாங்குடி சாலை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி வழியாக திருவாரூர்- மன்னார்குடி சாலை செல்கிறது. போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் போன்ற நகரப்பகுதிகளை இணைக்கும் வழித்தடமாக உள்ளது.
இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் லெட்சுமாங்குடி உத்திராபதீஸ்வரர் கோவில் எதிரிலும், பாலத்தை அடுத்த கடைவீதி சாலை முகப்பிலும் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டது.
வேகத்தடை இல்லை
அங்கு சாலை அகலப்படுத்தப்பட்ட போது வேகத்தடை அகற்றப்பட்டது. அதன் பிறகு அங்கு மீண்டும் வேகத்தடை அமைக்கவில்லை. வேகத்தடை அகற்றப்பட்ட பகுதி, மரக்கடை பஸ் நிறுத்தம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உத்திராபதீஸ்வரர் கோவில், கடைவீதி, தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியாகும். இந்த நிலையில் வேகத்தடை இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. பலர் விபத்தில் இறந்தும் உள்ளனர். எனவே இந்த பகுதியில் விபத்துகளை தவிர்க்க லெட்சுமாங்குடி உத்திராபதீஸ்வரர் கோவில் எதிரேயும், பாலத்தை அடுத்த கடைவீதி சாலை முகப்பிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.