< Back
மாநில செய்திகள்
பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து நெல்லைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து நெல்லைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
31 Aug 2022 3:27 AM IST

பாவூர்சத்திரத்தில் இருந்து நெல்லைக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பாவூர்சத்திரத்தில் இருந்து நெல்லைக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான்கு வழிச்சாலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் ஆலங்குளம், நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்கு சென்று வருகிறார்கள். மேலும் ஆலங்குளம், நெல்லை, பழையபேட்டை, பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களிலும் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நெல்லையிலிருந்து தென்காசி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையில் மற்ற வாகனங்களில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது.

இதற்கிடையே காலை நேரத்தில் தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், அதிக அளவில் ஒன் டூ ஒன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

கூடுதல் பஸ்கள்

பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தான் நெல்லை பஸ்கள் வருகின்றன.

இதனால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். இதனால் பாவூர்சத்திரம், ஆலங்குளத்தில் இருந்து நெல்லைக்கு செல்பவர்கள் பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் பஸ்களில் ஏற முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே காலை நேரத்தில் தென்காசியில் இருந்து நெல்லைக்கு பாவூர்சத்திரம் ஆலங்குளம் வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்