திருவாரூர்
புதிய பஸ் நிலையத்தில் சாலை சீரமைக்கப்படுமா? - பொதுமக்கள்
|திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
புதிய பஸ் நிலையம்
திருவாரூர் புதிய நிலையம் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையமானது நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்குள் செல்வதற்கும், வெளியில் வருவதற்கும் இருவழி இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது.
இந்த இருவழி இணைப்பு சாலைகளில் கடந்த 3 ஆண்டுகளாக மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சேதமடைந்து வருகிறது. இவ்வாறு சேதம் அடையும் சாலை தற்காலிகமாக சீரமைப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
மிகப்பெரிய பள்ளங்கள்
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பஸ் நிலையத்துக்குள் எந்த வாகனமும் சென்று வர முடியாத நிலை உள்ளது. இதனால் சாலை பயனற்ற நிலையில் உள்ளது. பள்ளங்களால் அரசு பஸ்கள் பழுது ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து, மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.