< Back
மாநில செய்திகள்
கஜா புயலின் போது தரைமட்டமான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் சீரமைக்கப்படுமா?
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கஜா புயலின் போது தரைமட்டமான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
7 Aug 2022 9:35 PM IST

வேதாரண்யம் அரசு கல்லூரியில் கஜா புயலின் போது தரைமட்டமான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதாரண்யம் அரசு கல்லூரியில் கஜா புயலின் போது தரைமட்டமான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு கல்லூரி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பாரதிதாசன் உறுப்பு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரி அந்த பகுதி மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்தது. தற்போது இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

கடந்த 2018-ம் ஆண்டு இக்கல்லூரி அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரிக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் கல்லூரியின் பின்புறத்தில் செடி, கொடிகள் வளர்ந்து மண்டி கிடக்கிறது.

இதனால் ஜன்னல் வழியாக கல்லூரிக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நுழைய வாய்ப்புள்ளது. கல்லூரியின் முன்புறம் உள்ள கண்ணாடிகள் கஜா புயலில் விழுந்து சேதமடைந்தது. சேதமடைந்த பகுதி அப்புறப்படுத்தாமலும், புனரமைக்கப்படாமலும் உள்ளது.

தரைமட்டமான வாகனம் நிறுத்தும் இடம்

இதனால் எந்த நேரத்திலும் அந்த கண்ணாடிகள் விழுந்து விபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்தில் மாணவா்கள் சென்று வருகின்றனா். கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்களின் வசதிக்காக வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வாகனம் நிறுத்தும் இடம் கஜா புயலின் போது மண்ணுக்குள் புதைந்த நிலையில் தரைமட்டமாக காட்சி அளிக்கிறது. இதுவரை அது சீரமைக்கப்படவில்லை. இதனால் மாணவா்கள் தங்களது வாகனங்களை வெயில், மழை நேரங்களில் திறந்து வெளியில் நிறுத்தி வைக்கும் அவலம் உள்ளது. இதனால் மாணவர்களின் வாகனங்கள் சேதமடையும் நிலை உள்ளது.

சீரமைக்க வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கல்லூரியின் பின்புறம் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதையும், கல்லூரியின் முன்புறம் உடைந்துள்ள கண்ணாடிகளையும், கஜா புயலின் போது தரைமட்டமான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்