< Back
மாநில செய்திகள்
3 மாதமாக பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையம்  திறக்கப்படுமா?
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

3 மாதமாக பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையம் திறக்கப்படுமா?

தினத்தந்தி
|
7 Aug 2022 9:29 PM IST

விழுந்தமாவடியில் 3 மாதமாக பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுந்தமாவடியில் 3 மாதமாக பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏ.டி.எம். மையம்

வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி கடலோரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மீன்பிடி தொழிலும், தோட்டக்கலை பயிரான மா, தென்னை, காய்கறிகளும் விளைவிக்கப்பட்டுள்ளன. விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், காமேஸ்வரம், வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் விழுந்தமாவடி கடைவீதியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியுடன் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது.

3 மாதமாக பூட்டி கிடக்கும் அவலம்

இந்த ஏ.டி.எம். எந்திரம் பழுதடைந்ததால் கடந்த 3 மாதமாக செயல்படாமல் மையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்தபகுதி மக்கள் பணம் எடுக்க முடியாமலும், பணம் போட முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்திற்கு செல்ல வேண்டிய அவலம் உள்ளது.

திறக்க வேண்டும்

இந்த பகுதியில் விவசாயிகள், மீனவர்கள் அதிக அளவில் பணபரிவர்த்தனை செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழுந்தமாவடியில் 3 மாதமாக பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்