< Back
மாநில செய்திகள்
வெள்ளையாற்றங்கரையில் புதிய படித்துறை கட்ட வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

வெள்ளையாற்றங்கரையில் புதிய படித்துறை கட்ட வேண்டும்

தினத்தந்தி
|
23 May 2022 10:28 PM IST

வேளுக்குடி வெள்ளையாற்றங்கரையில் புதிய படித்துறை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் உள்ள கோம்பூர் கிராமத்தில், அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, வெள்ளையாற்றின் கரையோரத்தில் படித்துறை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. அந்த படித்துறை பிள்ளையார் கோவில் முகப்பில் உள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மற்றும் கிராம மக்கள் படித்துறையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த படித்துறையில் படிக்கட்டுகள் மற்றும் தடுப்புச்சுவர் இடிந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. தற்போது அந்த படித்துறையை கிராம மக்கள் சிரமத்துடன் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே சேதம் அடைந்த படித்துறையை அகற்றி விட்டு அங்கு புதிதாக படித்துறை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்