5-வது காவல் ஆணையம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு -தமிழக அரசு அறிவிப்பு
|சென்னை அசோக்நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இந்த காவல் ஆணையம் இயங்கி வருகிறது. காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை,
தமிழ்நாடு அரசு நேற்று வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
காவல்துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டு 5-வது காவல் ஆணையம் அமைத்தது. சென்னை அசோக்நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இந்த காவல் ஆணையம் இயங்கி வருகிறது. காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
கருத்துகளை தபால் மூலம் தெரிவிக்க விரும்புபவர்கள், 'தலைவர், 5-வது காவல் ஆணையம், காவல் பயிற்சி கல்லூரி வளாகம், அசோக் நகர், சென்னை-93' என்ற முகவரிக்கும், மின்னஞ்சலில் அனுப்ப விரும்புவோர், fifthpolicecommision@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் கருத்துகளை அனுப்பலாம்.
நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புவர்கள், வருகிற டிசம்பர் 5-ந் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மேற்கண்ட முகவரிக்கு நேரடியாக சென்று கருத்துகளை சமர்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 9791987112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.